தக்காளி மறறும் ஆப்பிள் தோல் மூலம் தண்ணீரை சுத்தப்படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். தண்ணீரை சுத்தப்படுத்தி
குடிநீராக மாற்ற பலவித கருவிகள் உள்ளன. இந்த நிலையில் தக்காளி மற்றும் ஆப்பிள் பழங்களின் தோல் மூலம் தண்ணீரை சுத்திகரிக்கும் புதிய தொழி நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய தொழில் நுட்பத்தை சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா மல்லம்பட்டி என்பவர் உருவாக்கியுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
தக்காளி தோல்கள் மாசுபட்ட தண்ணீரின் கழிவு பொருட்கள், அதில் கரைந்திருக்கும் ரசாயனம் மற்றும் சாய பொருட்கள், பூச்சி கொல்லி மருந்துகளை நீக்கும் தன்மை கொண்டவை. அதே போன்று ஆப்பிள் தோலுக்கு தண்ணீரில் கரைந்து கலந்திருக்கும் கழிவுகளை உறிஞ்சும் சக்தி உள்ளது.
எனவே இவற்றின் மூலம் தண்ணீரை சுத்தப்படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை அவர் கண்டுபிடித்துள்ளார். இதற்கு மிக குறைந்த செலவே ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர் கண்டுபிடித்துள்ள தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் செயல்பட மின்சாரம் தேவை.
How to purify water using tomato skin, indian origin scientist found an innovation